Wednesday 2 March 2011

தேவதாசிகள் ஒழிப்பும் பெரியாரும்


நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு -இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் - தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள். இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம் -வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அமுங்கினி போல உட்கார்ந்தார்.

Monday 4 October 2010

தலை சுற்ற வைக்கும் காளமேகர் கவிதை


"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி"

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் தலை சுற்ற வைக்கும்

அது இப்படித்தான் பொருள்படும்:


தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)

தூதோ- மூலமாக அனுப்பும் தூது

தீது - நன்மை பயக்காது

தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ

தூது - தூதுப் பணியில்

தூதைஓதாது - (திறம்பட) ஓதாது

தூதி தூது - தோழியின் தூதோ

ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது

தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்

தொத்து - தொடர்தலும்

தீது - தீதாகும்

தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை

ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!

Sunday 18 October 2009

Video: Atrocity inWanni Camps depicted in London Streets


In a protest mach in London against the illegal detention of over 280,000 Tamils the atrocity against Tamils depicted. Thanks for the friend who sent me the video by e-mail. Click on play sign to watch the video footage.


Over 50,000 people participated in this protest rally without celebrating deepavali.

Sunday 11 October 2009

Krishanthy & Monica - view of the Srilankan Prime Minister



Between November 1995 and March 1997, Monica Lewinsky had an intimate relationship with former American President Bill Clinton. She later testified that the relationship involved in the Oval Office and other sexual contact but that sexual intercourse did not occur.


In April 1996, Lewinsky's superiors relocated her job to The Pentagon because they felt she was spending too much time around Clinton. Lewinsky confided in a co-worker named Linda Tripp about her relationship with the President. Beginning in September 1997, Tripp began secretly recording their telephone conversations regarding the affair with Clinton. In January 1998, after Lewinsky had submitted an affidavit in the Paula Jones case denying any physical relationship with Clinton, and attempted to persuade Tripp to lie under oath in the Jones case, Tripp gave the tapes to Independent Counsel Kenneth Starr, and these tapes added to his ongoing investigation into the Whitewater controversy. Starr broadened his investigation to include investigating Lewinsky, Clinton, and others for possible perjury and subornation of perjury in the Jones case. Noteworthy for its revelation of Tripp's motivations was her reporting of their conversations to literary agent Lucianne Goldberg. Tripp also convinced Lewinsky to save the gifts that Clinton had given her during their affair, and not to dry clean what would later be infamously known as "the blue dress."


Krishanthyi Kumarasamy

On Saturday Sep. 7, 1996, Krishanthi Kumarasamy, an 18 year old student at Chundikuli Girls' High School went missing, soon after she had taken her first paper at the GCE A/L examination. She was seen by a number of witnesses being taken into custody by Sinhala army personnel at the Kaithady checkpoint, and she disappeared soon after. According to a report published later in the Sri Lanka Sunday Times (Nov 3, 1996),
"She was stopped at the checkpoint and three soldiers allegedly raped her until she fell unconscious. When she revived, according to the confessions, police officers and six soldiers further raped her."
On learning of Krishanthi's detention at the army check-point, her mother, Rasamma (59), who was the vice principal of Kaithady Maha Vithyalayam, accompanied by her son, Pranaban (16), and a neighbor, Kirupakaran Sithamparam (35), went to the army camp, and then they too disappeared.
The same Sri Lanka Sunday Times report said, "Her journey was not only futile but she, her son and neighbor were strangled, cut into pieces and buried in a little hut within the gates of the army camp." Krishanthi's relatives in Colombo, including her older sister, Prashanthi (21), who was staying in Colombo at that time, took up the matter with authorities in Colombo, including President Kumaratunga, but nothing was done as the army headquarters denied the arrests. On Sep 20th, Amnesty International published an Urgent Action Appeal (UA 222/96), and even at this stage the government remained silent. On Oct 23, more than 6 weeks after their disappearances, the Colombo-based Tamil daily Virakesari published the story. Although none of the other newspapers published it, things began to heat up. The matter was raised in Parliament, and all of a sudden the four bodies buried in a shallow grave within the army camp were found.
An eminent lawyer who involved in the Krishanthi’s case also murdered.
The importance of this case lies not only in the horrendous suffering of the individuals involved and the families they left behind, but also in the implications of war crimes and crimes against humanity which still remain to be prosecuted.

Is Srilankan Prime Minister trying relate and compare these two women?
American Secretary of State Hillary Clinton's made a remark that the State Department noted that the US government and international human rights groups over the years had detailed, "numerous cases of rape and sexual violence in Sri Lanka, particularly acts committed against women held in detention by the government. The Prime minister of Srilanka responded that Secretary of State Hillary Clinton has forgotten the “Monica Lewinsky episode” and should “put her house in order.

Wednesday 2 September 2009

சிலேடைச் சினிமாப் பாடல்

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ? என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..

காதலர்களுக்கு நிலவு காயுமாம் - சுடுமாம்.

அத்திக்காய் - அந்தத் திசையாய்

ஆலங்காய் - நஞ்சுண்டவனைக் காய்த்திடு - சுட்டிடு

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக் காய் மங்கை என்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என்னுளம் காயாகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?

பாவைக்காய் - பெண்ணிற்காக

அவரைய் காய் - அவரைச் சுட்டிடு

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ?
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

உருவத்தால் நான் கன்னியானாலும் மனதால் கன்னியல்லவாம்

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
ஜாதிக்காய் பெட்டகம் போல் தனிமையில் இன்பம் கனியக் காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ?

சொன்னது விளங்கவில்லையா? தூது சொல்லுவாய் நிலவே!

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
உள்ளமெலாம் மிளகாயோ ஒவ்வொரு பேச்சுரைக்கயோ?
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரிக்காயோ?
கோதையெனைக் காயாதே கொத்தவரங்காய் வெண்ணிலவே
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா

உள்ளம் இளக மாட்டாயா? இரங்க மாட்டாயா?

பேசுசு உரைக்க மாட்டாயா?

கொத்தவரங்காய் -கொற்றவரைச் சுடு நிலவே

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?


Saturday 29 August 2009

செய்திகள் தூசிப்பது தமிழினி


News:ராஜபக்சவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயற்படுவது படுபயங்கரமானது: அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் போய்ல் பேட்டி
Thamilini: ஒரு குடும்பத்திற்கும் ஒரு சாதிக்கும் இது உகந்தது.

News:இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை மீள்பரிசீலனை செய்யவேண்டும்: பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு.
Thamilini: காந்தி தேசம் இதில் பெருமை அடைகிறது

News:கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது இடம்பெயர்ந்த மக்களுக்கு பஹ்ரைன் நாடு 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியது
Thamilini: ராஜபக்சே கடையில் நல்ல வியாபாரம்.

News:தடுப்பு முகாங்களில் உள்ள மக்களின் பேரலவத்தையும் அனைத்துலக சமூகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? - சுரேஸ் பிரேமச்சத்திரன்
Thamilini: நீங்களும் வேடிக்கை பார்க்காமல் ஏதாவது செய்யுங்கள்.

News:ஈழத் தமிழர்களுக்கு உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை – மு.ஸ்டாலின்

Thamilini: அப்பன் விடுத்த கோரிக்கை எல்லாம் நிறைவேற்றீட்டாங்கள். இப்போ மகன் கிளம்பீட்டான்யா!!!

Wednesday 12 August 2009

காளமேகத்தின் கவிதை..

காளமேகப் புலவரின் பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதை தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது

இதன் பொருள்:

தத்தி தாது ஊதுதி / தாது ஊதி தத்துதி/
துத்தித் துதைதி/ துதைந்து அத்தாது ஊதுதி/
தித்த தித்த தித்தித்த தாது எது / தித்தித்தது
எத்தாதோ / தித்தித்த தாது /

பூவுக்கு பூ மாறி மாறி பயணம் செய்யும்
ஒரு வண்டைப் பார்த்து காளமேகப் புலவர் பாடிய
பாடல்தான் இது.

தத்தல் – பாய்தல்
தாது – மகரந்தம், பூ,பூவிதழ், பூந்தாது

பொருள் தெரிய வேண்டிய வார்த்தைகள் இவைதான் .
பொருளை பார்ப்போம்.

(வண்டே) தத்தி தாது ஊதுதி- பாய்ந்து மகரந்தத்தை
ஊதுகின்றாய்

தாது ஊதி தத்துதி- மகரந்தம் ஊதி பின்
பாய்கின்றாய்.

துத்தித் துதைதி/ – து..தி..என கத்திக்கொண்டு
பூவை நெருங்குகின்றாய்.

துதைந்து அத்தாது ஊதுதி/ – நெருங்கி அந்த பூவின்
தாதுவையும் ஊதுகின்றாய்.

தித்த தித்த தித்தித்த தாது எது – மிகவும்
இனிமையான பூ எது..?

தித்தித்தது எத்தாதோ – தித்தித்த தாது – இனிமையானது
எந்த பூவின் மகரந்தம்..? எப்பூவின் அழகிய இதழ்.

 
Krishanthy|| சிலேடை||