Monday 4 October 2010

தலை சுற்ற வைக்கும் காளமேகர் கவிதை


"தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது

தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த

துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது

தித்தித்த தோதித் திதி"

என்ற கவி காளமேகப் புலவரின் பாடலைப் பார்த்தால் தலை சுற்ற வைக்கும்

அது இப்படித்தான் பொருள்படும்:


தாதி - தோழியின்(அடிமைப் பெண்ணின்)

தூதோ- மூலமாக அனுப்பும் தூது

தீது - நன்மை பயக்காது

தத்தை- (நான் வளர்க்கும்) கிளியோ

தூது - தூதுப் பணியில்

தூதைஓதாது - (திறம்பட) ஓதாது

தூதி தூது - தோழியின் தூதோ

ஒத்தித்த தூததே - நாளைக் கடத்திக் கொண்டே போகும்.
தாதொத்த - (ஆகவே) பூந்தாதினைப் போன்ற
துத்தி - தேமல்கள்
தத்தாதே- என் மேல் படராது

தேதுதித்த - தெய்வத்தை வழிபட்டுத்

தொத்து - தொடர்தலும்

தீது - தீதாகும்

தித்தித்தது _ தித்திப்பு நல்கும் என் காதலனின் பெயரை

ஓதித் திதி - ஓதிக் கொண்டிருப்பதையே செய்வேனாக!
 
Krishanthy|| சிலேடை||