Saturday 29 August 2009

செய்திகள் தூசிப்பது தமிழினி


News:ராஜபக்சவுக்கு ஆதரவாக இந்திய அரசு செயற்படுவது படுபயங்கரமானது: அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் போய்ல் பேட்டி
Thamilini: ஒரு குடும்பத்திற்கும் ஒரு சாதிக்கும் இது உகந்தது.

News:இலங்கைக்கான ஆயுத ஏற்றுமதியை மீள்பரிசீலனை செய்யவேண்டும்: பிரித்தானிய அனைத்துக் கட்சி குழு.
Thamilini: காந்தி தேசம் இதில் பெருமை அடைகிறது

News:கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது இடம்பெயர்ந்த மக்களுக்கு பஹ்ரைன் நாடு 10 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்கியது
Thamilini: ராஜபக்சே கடையில் நல்ல வியாபாரம்.

News:தடுப்பு முகாங்களில் உள்ள மக்களின் பேரலவத்தையும் அனைத்துலக சமூகம் வேடிக்கை பார்க்கப் போகிறதா? - சுரேஸ் பிரேமச்சத்திரன்
Thamilini: நீங்களும் வேடிக்கை பார்க்காமல் ஏதாவது செய்யுங்கள்.

News:ஈழத் தமிழர்களுக்கு உதவிகளை இந்தியா வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை – மு.ஸ்டாலின்

Thamilini: அப்பன் விடுத்த கோரிக்கை எல்லாம் நிறைவேற்றீட்டாங்கள். இப்போ மகன் கிளம்பீட்டான்யா!!!

Wednesday 12 August 2009

காளமேகத்தின் கவிதை..

காளமேகப் புலவரின் பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதை தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது

இதன் பொருள்:

தத்தி தாது ஊதுதி / தாது ஊதி தத்துதி/
துத்தித் துதைதி/ துதைந்து அத்தாது ஊதுதி/
தித்த தித்த தித்தித்த தாது எது / தித்தித்தது
எத்தாதோ / தித்தித்த தாது /

பூவுக்கு பூ மாறி மாறி பயணம் செய்யும்
ஒரு வண்டைப் பார்த்து காளமேகப் புலவர் பாடிய
பாடல்தான் இது.

தத்தல் – பாய்தல்
தாது – மகரந்தம், பூ,பூவிதழ், பூந்தாது

பொருள் தெரிய வேண்டிய வார்த்தைகள் இவைதான் .
பொருளை பார்ப்போம்.

(வண்டே) தத்தி தாது ஊதுதி- பாய்ந்து மகரந்தத்தை
ஊதுகின்றாய்

தாது ஊதி தத்துதி- மகரந்தம் ஊதி பின்
பாய்கின்றாய்.

துத்தித் துதைதி/ – து..தி..என கத்திக்கொண்டு
பூவை நெருங்குகின்றாய்.

துதைந்து அத்தாது ஊதுதி/ – நெருங்கி அந்த பூவின்
தாதுவையும் ஊதுகின்றாய்.

தித்த தித்த தித்தித்த தாது எது – மிகவும்
இனிமையான பூ எது..?

தித்தித்தது எத்தாதோ – தித்தித்த தாது – இனிமையானது
எந்த பூவின் மகரந்தம்..? எப்பூவின் அழகிய இதழ்.

சிலேடை இனிமை


சோமசுந்தரப் புலவர் தந்த அருமையான சிலேடைப் பாடல்:
முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே"

இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிலேடைக் கருத்துடன் வருகின்றன:
சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை

முடிவிலாது வாழ்கின்ற வெள்ளிமலைக்குத் (சுண்ணாகம் = சுல் + நாகம் -வெள்ளிமலை)தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய(தாவடி=தாவு + அடி) (கொக்கு = கரும்பு, கொகுவில்=கொக்கு +வில்) (கொக்குவிலான்=கரும்புவில்லுடையோன்=மன்மதன்) வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடியகாமமுடைய(கொடிகாமத்தாள்), ஆனைக்கோட்டை போன்ற என் மனதை அசைந்து கட்டுடை வெளிவிட்டனள் கட்டியிருந்த ஆடையைஅவிழ்த்து விட்டாள். (உடு=நட்சத்திரம் உடுவிலான் சந்திரன்)நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கரும்புவில்லை உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன்.(மல்லாகத்தான்=மாலை அணிந்தவன்) கடப்ப மாலையைத் தரித்த
மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து, ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.

Thursday 6 August 2009

நல்வரவு.


 கணபதி துணை 
 
Krishanthy|| சிலேடை||