Wednesday 12 August 2009

காளமேகத்தின் கவிதை..

காளமேகப் புலவரின் பாடல்.

தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதை தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது

இதன் பொருள்:

தத்தி தாது ஊதுதி / தாது ஊதி தத்துதி/
துத்தித் துதைதி/ துதைந்து அத்தாது ஊதுதி/
தித்த தித்த தித்தித்த தாது எது / தித்தித்தது
எத்தாதோ / தித்தித்த தாது /

பூவுக்கு பூ மாறி மாறி பயணம் செய்யும்
ஒரு வண்டைப் பார்த்து காளமேகப் புலவர் பாடிய
பாடல்தான் இது.

தத்தல் – பாய்தல்
தாது – மகரந்தம், பூ,பூவிதழ், பூந்தாது

பொருள் தெரிய வேண்டிய வார்த்தைகள் இவைதான் .
பொருளை பார்ப்போம்.

(வண்டே) தத்தி தாது ஊதுதி- பாய்ந்து மகரந்தத்தை
ஊதுகின்றாய்

தாது ஊதி தத்துதி- மகரந்தம் ஊதி பின்
பாய்கின்றாய்.

துத்தித் துதைதி/ – து..தி..என கத்திக்கொண்டு
பூவை நெருங்குகின்றாய்.

துதைந்து அத்தாது ஊதுதி/ – நெருங்கி அந்த பூவின்
தாதுவையும் ஊதுகின்றாய்.

தித்த தித்த தித்தித்த தாது எது – மிகவும்
இனிமையான பூ எது..?

தித்தித்தது எத்தாதோ – தித்தித்த தாது – இனிமையானது
எந்த பூவின் மகரந்தம்..? எப்பூவின் அழகிய இதழ்.

No comments:

Post a Comment

 
Krishanthy|| சிலேடை||