Wednesday 12 August 2009

சிலேடை இனிமை


சோமசுந்தரப் புலவர் தந்த அருமையான சிலேடைப் பாடல்:
முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தாள் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே"

இது யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்களின் பெயர்கள் சிலேடைக் கருத்துடன் வருகின்றன:
சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை

முடிவிலாது வாழ்கின்ற வெள்ளிமலைக்குத் (சுண்ணாகம் = சுல் + நாகம் -வெள்ளிமலை)தலைவனானவன் முந்தித் தாவுகின்ற பாதங்களையுடைய(தாவடி=தாவு + அடி) (கொக்கு = கரும்பு, கொகுவில்=கொக்கு +வில்) (கொக்குவிலான்=கரும்புவில்லுடையோன்=மன்மதன்) வந்து குறித்த இடத்திற் சேர, ஒரு பெண் கொடியகாமமுடைய(கொடிகாமத்தாள்), ஆனைக்கோட்டை போன்ற என் மனதை அசைந்து கட்டுடை வெளிவிட்டனள் கட்டியிருந்த ஆடையைஅவிழ்த்து விட்டாள். (உடு=நட்சத்திரம் உடுவிலான் சந்திரன்)நட்சத்திரக்கூட்டங்களுக்குத் தலைவனான சந்திரன் தோன்ற கரும்புவில்லை உடைய மன்மதன் மிகுந்த கோபமடைந்தனன்.(மல்லாகத்தான்=மாலை அணிந்தவன்) கடப்ப மாலையைத் தரித்த
மார்பகத்தில், இடைவிடாதனையென்று, தனது ஆவி போன்ற கண்களிலிருந்து, ஆனந்தக் கண்ணீர் சொரிய ஓர் வாலைப் பெண் வந்து சேர்ந்தாள்.

No comments:

Post a Comment

 
Krishanthy|| சிலேடை||